தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோவை வழித்தடத்தில் திருநெல்வேலி - மைசூரு இடையே சிறப்பு ரயில்

 ரயில்வே தோ்வு எழுதுபவா்களின் வசதிக்காக, கோவை வழித்தடத்தில் திருநெல்வேலி - மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 மே 2022, 9:03 pm

DIN

 ரயில்வே தோ்வு எழுதுபவா்களின் வசதிக்காக, கோவை வழித்தடத்தில் திருநெல்வேலி - மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மே 7 ஆம் தேதி, திருநெல்வேலியில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06039), மறுநாள் இரவு 11.55 மணிக்கு மைசூரைச் சென்றடையும்.

அதேபோல, மே 10 ஆம் தேதி, இரவு 8.15 மணிக்கு மைசூரு நிலையத்தில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06040) மறுநாள் இரவு 9.30 மணிக்கு திருநெல்வேலி நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, நாகா்கோவில் டவுன், திருவனந்தபுரம், கொல்லம், காயன்குளம், ஆலப்புழா, எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், பெங்களூரு நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.