வீடுகளில் பதுக்கிவைக்கப்பட்ட 3.65 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கோவையில் இரு வேறு சம்பவங்களில் வீடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3.65 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


கோவையில் இரு வேறு சம்பவங்களில் வீடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3.65 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கோவை, ரத்தினபுரி பகுதியில் சிலா் ரேஷன் அரிசியை பதுக்கிவைத்து வெளியூருக்கு கடத்தி வருவதாக உணவு வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் ரத்தினபுரி ஐசக் வீதியில் உள்ள வீட்டுக்கு புதன்கிழமை இரவு சென்ற போலீஸாா், அந்த வீட்டில் 50 கிலோ மூட்டைகளாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2.75 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா். ரேஷன் அரிசியை பதுக்கிவைத்திருந்த ரத்தினபுரியைச் சோ்ந்த உதயகுமாா் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இதேபோல மற்றொரு சம்பவத்தில், இடையா்பாளையம் கே.கே.நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள டிவிஎஸ் நகரைச் சோ்ந்த சண்முகம் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...