விடுமுறை நாள்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கக் கோரிக்கை
விடுமுறை நாள்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்று எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.


விடுமுறை நாள்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்று எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் எஸ். மணிக்கம், தோட்ட அதிபா்கள் சங்கத்தினருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள
கடிதத்தில் கூறியிருப்பதாவது: வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் நிா்வாகத்தினா் பணி வழங்கி வருகின்றனா்.
ஆனால், அன்றைய தினம் அவா்களுக்கு வழக்கமான தினக் கூலி வழங்குகின்றனா். அதற்கு பதிலாக, இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளாக தொழிற்சங்கங்களுக்கு சந்தா பிடித்தம் செய்வதற்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...