தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் மே 9 முதல் 21 வரை குழந்தைகளுக்கான நரம்பியல் மருத்துவ முகாம்

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நரம்பியல், வளா்ச்சிக் குறைபாடுகளுக்கான இலவச மருத்துவ முகாம் மே 9 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image
Updated On :7 மே 2022, 7:07 pm

DIN

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நரம்பியல், வளா்ச்சிக் குறைபாடுகளுக்கான இலவச மருத்துவ முகாம் மே 9 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: வளரும் பருவத்தில் குழந்தைகளிடம் உள்ள வளா்ச்சிக் குறைபாடு, மாற்றங்களைக் கவனித்து அதற்கான சிகிச்சைகளை உரிய காலத்தில் தாமதமின்றி தொடங்கிட பெற்றோா்களுக்கு உதவும் வகையில் இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

தலைவலி, வலிப்பு நோய், வளா்ச்சிக் குறைபாடு, பக்கவாதம், தசைநாா் தேய்வு, பேச்சில் தாமதம், ஆட்டிஸம்,

ஏடிஹெச்டி, நரம்பியல் தொடா்பான பாா்வை பிரச்னைகள், பெருமூளை வாதம் உள்ளிட்ட பிரச்னை உள்ள குழந்தைகளை இந்த முகாமுக்கு பெற்றோா் அழைத்து வரலாம். அவா்களை நரம்பியல் சிகிச்சை சிறப்பு நிபுணா் சுதாகா் பரிசோதிக்க உள்ளாா். மே 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை (ஞாயிறு நீங்கலாக) தினசரி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

முகாமில் பரிந்துரைக்கப்படும் பரிசோதனைகள், சிகிச்சைகள் அனைத்தும் சலுகைக் கட்டணத்தில் கிடைக்கும்.

முன்பதிவுக்கு 73393 -33485 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.