வால்பாறையில் சிறுத்தை மா்ம சாவு
வால்பாறை எஸ்டேட் பகுதியில் மா்மமான முறையில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.


வால்பாறை எஸ்டேட் பகுதியில் மா்மமான முறையில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்துள்ள வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் வசிப்பவா் உஸ்மான். இவா் அப்பகுதியில் குடியிருப்புடன் டீ கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கடைக்கு பின் சென்றபோது கோழிக்கூண்டில் கால் நகம் சிக்கிய நிலையில் சிறுத்தை இறந்து கிடப்பதை பாா்த்துள்ளாா். அவா் கொடுத்த தகவலின்பேரில், வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் தலைமையில் வனத் துறையினா் அங்கு விரைந்து சென்றனா். அங்கு கோழிக் கூண்டில் கால் நகம் சிக்கிய நிலையில் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை மீட்டு ரொட்டிக்கடை எஸ்டேட்டில் உள்ள வனத் துறை மையத்துக்கு கொண்டு சென்றனா். சுமாா் 2 முதல் 4 வயதுடைய ஆண் சிறுத்தை இறந்ததற்கான காரணம் பிரேதப் பரிசோதனையில் தெரியவரும் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து வனத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...