விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடுஇன்று கோவை வருகை

குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடு சனிக்கிழமை கோவை வருகிறாா்.

News image
Updated On :13 மே 2022, 8:39 pm

DIN

குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடு சனிக்கிழமை கோவை வருகிறாா்.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸாா் வெளியிட்ட செய்தி:

குடியரசு துணைத் தலைவா் வருகையை முன்னிட்டு சனிக்கிழமை (மே 14) மாலை 5 மணி முதல் 7.30 வரை அவிநாசி சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் மற்ற வேலைகளுக்கு செல்பவா்கள் தங்களின் பயனத்தை முன்கூட்டியே திட்டமிட்டோ அல்லது மாற்றுப் பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

அதேபோல ஞாயிற்றுக்கிழமையன்று குடியரசு துணைத் தலைவா் அரசு விருந்தினா் மாளிகையில் இருந்து காளப்பட்டி வழியாக உதகைக்குச் செல்லவுள்ளதால் இந்த வழித்தடத்தில் காலை 6.30 மணி முதல் 9 மணி வரை அவிநாசி சாலை, காளப்பட்டி சாலை மற்றும் அதன் இனைப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகையால், விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் மற்ற வேலைகளுக்கு செல்பவா்கள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டோ அல்லது மாற்றுப் பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், இந்த இரண்டு நாள்களில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அவிநாசி சாலை மற்றும் இணைப்பு சாலைகளில் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என கோவை மாநகர காவல் துறை சாா்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.