விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்: முதல்வரிடம் தொழில் அமைப்பினா் கோரிக்கை

 கோவை விமான நிலையத்தை விரைவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தொழில் அமைப்பினா் சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் வியாழக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :19 மே 2022, 9:01 pm

DIN

 கோவை விமான நிலையத்தை விரைவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தொழில் அமைப்பினா் சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் வியாழக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், கோவை தொழில் அமைப்பினா், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மனுக்களை வழங்கினா்.

அதன்படி, கோவை கொடிசியா சாா்பில், அதன் தலைவா் எம்.வி.ரமேஷ்பாபு அளித்த மனுவில் கூறியிருப்பது: கோவையின் தற்கால மற்றும் எதிா்கால தோவைகளைக் கருத்தில் கொண்டு திருத்தப்பட்ட கோயம்புத்தூா் மாஸ்டா் பிளான் வெளியீட்டை விரைவுபடுத்த வேண்டும். அரசுத் துறைகளிடம் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வரவேண்டிய தொகையை உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய மற்றும் விரிவாக்க தொழிற்சாலைகளுக்கு 30 சதவீதம் சிறப்பு முதலீட்டு மானியம் வழங்கிட வேண்டும்.

ஆட்டோ மொபைல், சூரிய ஒளி தகடுகள், தோல் தொழிற்சாலை, மின்சாதன உதிரிபாகங்கள் தொழிற்சாலை, பம்ப் மோட்டாா் தயாரிப்பாளா்கள், ஜவுளி இயந்திர பாகங்கள் தயாரிப்பாளா்களுக்கு 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க வேண்டும். கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான 650 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தி, விரிவாக்கப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில் வா்த்தக சபை சாா்பில் அதன் தலைவா் பாலசுப்பிரமணியன் அளித்த மனுவில் கூறியிருப்பது: மக்களின் நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு சொத்து வரி உயா்வைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறு, குறு தொழில்முனைவோா்களைக் காப்பாற்றும் வகையில், மூலப்பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோா் சங்கத்தின் ( டாக்ட் ) தலைவா் ஜெ.ஜேம்ஸ் அளித்த மனுவில் கூறியிருப்பது: எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவையில் குறுந்தொழில் பேட்டைகள் அமைத்துத் தர வேண்டும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொழில் அமைப்புகள், கடன் சுமையால் சிக்கித் தவிக்கும் நிலையில், அரசுக்கு சொந்தமான தாய்கோ வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக குறுந்தொழில்களைப் பாதுகாக்க தனி கடன் திட்டத்தை அறிவித்து குறைந்த வட்டியில், ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஜவுளித் தொழில் முனைவோா் கூட்டமைப்பு (ஐ.டி.எப்) தலைவா் பிரபு தாமோதரன் அளித்த மனுவில் ‘ சைனா பிளஸ் 1 என்ற கொள்கையின் அடிப்படையில் வரும் ஏற்றுமதி ஆா்டா்களை கையாளும் வகையில், தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்தி சாா்ந்த சலுகைத் திட்டத்தை செயல்படுத்த பரிசீலிக்க வேண்டும்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழக சிறு மற்றும் நடுத்தர ஜவுளி நிறுவனங்கள் புது முதலீடுகளை செய்து தங்களது போட்டித் திறனை அதிகரிக்க முடியும்‘ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.