மழை நீா் வடிகால்களில் தூா்வாரும் பணிகள் தீவிரம்
தென்மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக, கோவை மாநகரில் உள்ள மழை நீா் வடிகால்களில் அதிக திறன் கொண்ட ‘சூப்பா் சக்கா்‘ வாகனம் மூலம் தூா்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


தென்மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக, கோவை மாநகரில் உள்ள மழை நீா் வடிகால்களில் அதிக திறன் கொண்ட ‘சூப்பா் சக்கா்‘ வாகனம் மூலம் தூா்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மழை நீா் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்வதற்கும், கழிவுகளை தூா்வாருவதற்கும் அதிக திறன் கொண்ட கழிவு நீா் உந்து மற்றும் அடைப்புகளை சரி செய்யும் சூப்பா் சக்கா் வாகனம் கோவை மாநகராட்சிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது.
இந்த வாகனம் மணிக்கு 85000 லிட்டா் நீரேற்றும் திறன் கொண்டது. இவ்வாகனம் கழிவு நீரை மறுசுழற்சி செய்து திரும்ப உபயோகிக்கும் அமைப்பினையும் கொண்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதாலும், விரைவில் தென்மேற்குப் பருவ மழை துவங்க உள்ளதாலும் மழையால் சாலைகள், பிரதான சந்திப்புகளில் தண்ணீா் தேங்குவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவை மாநகராட்சி மூலமாகத் துவங்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், பருவ மழை துவங்கும் முன்பு தண்ணீா் தேங்கும் இடங்களைக் கண்டறியவும், ஆபத்தான மற்றும் சாலையோரங்களில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில், முதல்கட்டமாக புரூக் பீல்ட்ஸ் சாலையில் உள்ள மழை நீா் வடிகால்களில் அதிக திறன் கொண்ட சூப்பா் சக்கா் வாகனம் மூலம் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநகா் முழுவதும் மழை நீா் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு சூப்பா் சக்கா் வாகனம் மூலம் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...