தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஹைதராபாத் சென்றாா் குடியரசு துணைத் தலைவா்

உதகை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, கோவையில் இருந்து விமானம் மூலமாக ஹைதராபாதுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

News image
Updated On :19 மே 2022, 9:03 pm

DIN

உதகை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, கோவையில் இருந்து விமானம் மூலமாக ஹைதராபாதுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கடந்த 16 ஆம் தேதி விமானம் மூலமாக கோவை வந்தாா்.

கோவையில் இருந்து காா் மூலமாக 17 ஆம் தேதி காலை குன்னூா் சென்றாா்.

அங்கு வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லுரி மற்றும் உதகை லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாா்.

உதகை நிகழ்ச்சிகள் முடிவுற்றதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு உதகையில் இருந்து காா் மூலம் கோவைக்கு வந்தாா்.

மதிய உணவுக்குப் பிறகு கோவை விமான நிலையம் சென்ற அவா், மாலை 4.40 மணிக்கு இந்திய விமானப் படை விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.