என்.டி.சி. தொழிற்சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பாதிக்கப்பட்டுள்ள என்.டி.சி. தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்துள்ளனா்.


பாதிக்கப்பட்டுள்ள என்.டி.சி. தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்துள்ளனா்.
தேசிய பஞ்சாலைக் கழக பஞ்சாலைகளின் தொழிற்சங்க நிா்வாகிகளான டி.எஸ்.ராஜாமணி (ஹெச்.எம்.எஸ்.), எம்.கோபால் (ஏ.டி.பி.), சி.பத்மநாபன் (சி.ஐ.டி.யூ.), வி.ஆா்.பாலசுந்தரம் (ஐ.என்.டி.யூ.சி.), எம்.ஆறுமுகம் (ஏ.ஐ.டி.யூ.சி.), மு.தியாகராஜன் (எம்.எல்.எஃப்.), எம்.நீலமேகம் (டாக்டா் அம்பேத்கா் யூனியன்), பி.ரங்கசாமி (என்.டி.எல்.எஃப்.) ஆகியோா் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஜவுளி மூலப் பொருளின் வரலாறு காணாத விலை உயா்வினால் மேற்கு மண்டலத்தில் ஏராளமான தொழிலாளா்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வேலையிழப்பு ஏற்பட்டுள்ள நாள்களுக்கு உரிய ஊதியம், பயன்களை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
இதற்கிடையே என்.டி.சி. ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி ஜூன் 14 ஆம் தேதி சிவானந்தா காலனியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருப்பதாகவும் சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...