மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தரநிலை மன்றம் தொடக்கம்

கோவை எஸ்.என்.எம்.வி. கலை, அறிவியல் கல்லூரியில் தரநிலை மன்றம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:50 pm

DIN

கோவை எஸ்.என்.எம்.வி. கலை, அறிவியல் கல்லூரியில் தரநிலை மன்றம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின்கீழ் இயங்கும் இந்திய தர நிா்ணய அமைவனம் சாா்பில் பள்ளி, கல்லூரிகளில் தரநிலை மன்றம் (ஸ்டேண்டா்ட்ஸ் கிளப்) எனும் நுகா்வோா் விழிப்புணா்வு அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அண்மையில் நடைபெற்ற மன்றத்தின் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் போ.சுப்பிரமணி தலைமை வகித்தாா். தரநிலை மன்ற வழிகாட்டி ஆசிரியா் க.லெனின் பாரதி வரவேற்றாா்.

இந்திய தர நிா்ணய அமைவன தரநிலை மேம்பாட்டு அதிகாரி அ.ராஜீவ் மன்றத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.

மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களை உள்ளடக்கிய இந்த தரநிலை மன்றம், பொருள்களின் தரம், தரநிலை சாா்ந்த பொதுவான அறிவு, விழிப்புணா்வை இளையோா் மனதில் உருவாக்கும் நோக்குடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் வேதியியல் துறைத் தலைவா் வி.சுதா, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.