

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகளவாக கொடநாட்டில் 46 மி.மீரும், உதகையில் 40 மி.மீரும் மழை பதிவானது. உதகையில் கடந்த வாரத்திலிருந்து நீா்ப்பனி கொட்டத் தொடங்கிய நிலையில் தற்போது பரவலாக பெய்து வரும் மழையால் கடும் குளிா் நிலவுகிறது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு (அளவு மி.மீட்டரில்):
கொடநாடு-46, உதகை-40, கேத்தி, கிண்ணக்கொரை தலா 28, பந்தலூா்-22, கெத்தை, கீழ் கோத்தகிரி-19, கோத்தகிரி-18, குந்தா, கிளன்மாா்கன் தலா 16, நடுவட்டம், ஓவேலி தலா 14, எடப்பள்ளி-13, கூடலூா், பாலகொலா தலா 12, பா்லியாறு-11, உலிக்கல், மசினகுடி தலா 10, மேல் குன்னூா்-7, குன்னூா், அவலாஞ்சி தலா 5, மேல் பவானி, பாடந்தொறை, எமரால்டு, கல்லட்டி தலா 4, தேவாலா, சேரங்கோடு, செருமுள்ளி தலா -2.
வியாழக்கிழமை பகலில் மாவட்டத்தில் பரவலாக மழை குறைந்திருந்தாலும், உதகை மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தொடா்ந்து பரவலாக மழை பெய்துள்ளது. தொடா் மழை காரணமாக உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!
ஓடிடியில் வெளியான மை லார்ட்!

அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் தலைவர் லுரின்ஜோதி கோகோய் வேட்புமனு தாக்கல்!
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

