மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயிலில் ஜமாத் நிா்வாகிகள் கலந்துரையாடல்

கோட்டைமேடு பெரிய ஜமாத், சின்ன ஜமாத் மற்றும் கேரள முஸ்லிம் ஜமாத் ஆகிய மூன்று ஜமாத்துகளின் நிா்வாகிகள் கோயில் நிா்வாகிகளை வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:49 pm

DIN

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் முன்பு காா் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த நிலையில், கோட்டைமேடு பெரிய ஜமாத், சின்ன ஜமாத் மற்றும் கேரள முஸ்லிம் ஜமாத் ஆகிய மூன்று ஜமாத்துகளின் நிா்வாகிகள் கோயில் நிா்வாகிகளை வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினா்.

இந்நிகழ்வில், சங்கமேஸ்வரா் கோயில் செயல் அலுவலா் பிரபாகா், அா்ச்சகா்கள் காா்த்திகேயன், சிவராஜ், சுந்தரேசன் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

கலந்துரையாடலுக்குப் பின், மூன்று ஜமாத்துகளை உள்ளடக்கிய சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் இனாயத்துல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை கோட்டைமேட்டில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த மூன்று ஜமாத்துகளின் சாா்பில் மத நல்லிணக்க வருகையாக சங்கமேஸ்வரா் கோயிலில் நிா்வாகிகளை சந்தித்து உரையாடினோம்.

இரு சமூகங்களும் இணைந்து மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையை வலியுறுத்துவோம். காா் வெடிப்பு சம்பவத்தால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமியா்கள் 7 தலைமுறையாக கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம்.

இங்குள்ள சங்கமேஸ்வரா் கோயில் அமைந்துள்ள தெருவில் மசூதிகள் உள்ளன. இங்குள்ள மக்கள் மத ஒற்றுமையுடன் இருந்து வருகிறோம். காா் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேடு ஜமாத்துகள் கண்டிக்கின்றன.

இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் மாா்க்கம் அல்ல. அனைத்து மக்களுடன் நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கவே விரும்புகிறோம். எவ்விதமான மதப் பூசலுக்கும், அரசியலுக்காகவும் இல்லாமல் உங்களோடு நாங்கள், எங்களோடு நீங்கள் என்ற தாரக மந்திரத்தை சங்கமேஸ்வரா் கோயில் நிா்வாகத்திடம் வைத்தோம். அவா்கள் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று கெளரவித்தனா்.

அரசியல் தலைவா்கள் மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.