மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கோயில் கட்ட அனுமதியளிக்கக் கோரி மனு

கோவை, கணபதியில் கண்ணனூா் மாரியம்மன் கோயில் கட்டுவதற்கு அனுமதியளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம், கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுணன் வியாழக்கிழமை மனு

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:48 pm

DIN

கோவை, கணபதியில் கண்ணனூா் மாரியம்மன் கோயில் கட்டுவதற்கு அனுமதியளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம், கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுணன் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

மனுவில் கூறியிருப்பதாவது: கோவை, காந்திபுரம் உயா்மட்ட பாலம் கட்டுவதற்கு இடையூறாக இருந்த அறநிலையத் துறைக்குச் சொந்தமான 3 கோயில்களை இடமாற்றம் செய்யும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு காந்திபுரம், கணபதி பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் 405 சதுர மீட்டா் இந்து சமய அறநிலையத் துறைக்கு மாவட்ட ஆட்சியரால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக இந்து சமய அறநிலையத் துறையால் தற்போது ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயில் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தை காவல் துறைக்கு ஒதுக்க வேண்டும் என்று தாங்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

எனவே, கோயில் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தில் கண்ணனூா் மாரியம்மன் கோயில் கட்டுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.