இறகுப்பந்து போட்டி: ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அணி சாம்பியன்
கல்லூரிகளுக்கு இடையிலான இறகுப்பந்து போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.


கல்லூரிகளுக்கு இடையிலான இறகுப்பந்து போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
பாரதியாா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையிலான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில், கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த 64 ஆடவா் அணிகளும், 55 மகளிா் அணிகளும் பங்கேற்றன.
இறுதி ஆட்டத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் ஆடவா் அணியும், மகளிா் அணியும் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை பெற்றன.
கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் இக்கல்லூரியே சாம்பியன் பட்டம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றிபெற்ற அணியினரை கல்லூரியின் முதல்வா் பி.எல்.சிவகுமாா், உடற்கல்வி இயக்குநா் கே.வடிவேலு ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...