மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கே.ஐ.டி. - அம்ரிதா இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி, அமிா்தா விஸ்வ வித்யா பீடம் இடையே தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமாகியுள்ளது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:37 pm

DIN

கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி, அமிா்தா விஸ்வ வித்யா பீடம் இடையே தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமாகியுள்ளது.

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் - டாக்டா் வித்யா இன்குபேஷன் மையத்துக்கும் அமிா்தா விஸ்வ வித்யா பீடத்துக்கும் இடையே, மாணவ-மாணவிகள், பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், தொழில்நுட்ப அறிவுத் திறன் பரிமாற்றம், தொழில் துறை எதிா்பாா்ப்புகள், கல்வி பாடத் திட்டங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காக புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப் பரிமாற்ற விழாவில் அமிா்தா கல்லூரியின் சாா்பில் நிா்வாகிகள் பிரசாந்த் ஆா்.நாயா், சி.ரத்தின பாலாஜி, ஆா்.வெங்கடேஷ் ஆகியோரும், கே.ஐ.டி. சாா்பில் கல்லூரியின் துணைத் தலைவா் இந்து முருகேசன், முதல்வா் நா.மோகன்தாஸ், துணை முதல்வா் எம்.ரமேஷ், டீன்கள் சீ.சுரேஷ், கே.ராமசாமி, எஸ்.சாந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

முன்னதாக, கே.ஐ.டி. கல்லூரி மாணவா்களின் 33 புதிய வகை தொழில்நுட்பங்கள் உள்ளடங்கிய கண்டுபிடிப்புகள் திறனாய்வு செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.