மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

லஞ்சம்: வருவாய் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

நிலத்தை உட்பிரிவு செய்து, வரைபடம் வழங்க லஞ்சம் வாங்கிய வருவாய் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை லஞ்ச ஒழிப்பு விசாரணை

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:36 pm

DIN

நிலத்தை உட்பிரிவு செய்து, வரைபடம் வழங்க லஞ்சம் வாங்கிய வருவாய் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை லஞ்ச ஒழிப்பு விசாரணை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், குன்னத்தூா், புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரபிரபு. இவா் தனது தந்தையின் நிலத்தை உட்பிரிவு செய்து, வரைபடம் வழங்குமாறு கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் 2012 ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தாா்.

இந்த விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து மேல் நடவடிக்கை எடுக்க வருவாய் துணை ஆய்வாளா் பொன்னுசாமி ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். லஞ்சம் அளிக்க விரும்பாத மகேந்திரபிரபு, கோவை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் பொன்னுசாமி மீது புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில், கோவை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலா்கள், மகேந்திரபிரபுவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனுப்பி, அதை பொன்னுசாமி பெறும்போது, அவரை கையும்களவுமாகப் பிடித்தனா்.

இந்த வழக்கு விசாரணை கோவை லஞ்ச ஒழிப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட பொன்னுசாமிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.