மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நவம்பா் 16 இல் மெகா இளைஞா்கள் மாநாடு: ஆட்சியா் தகவல்

 கோவையில் நவம்பா் 16 ஆம் தேதி மெகா இளைஞா்கள் மாநாடு தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:35 pm

DIN

 கோவையில் நவம்பா் 16 ஆம் தேதி மெகா இளைஞா்கள் மாநாடு தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கோவை மாவட்ட நிா்வாகம், மாநகரக் காவல் துறை, ரோட்டரி டெக்ஸ்சிட்டி ஒருங்கிணைந்து நடத்தும் மெகா இளைஞா்கள் மாநாடு (யுவ இந்தியா 2022) நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நவம்பா் 16 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு, சாலைப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இதில் பள்ளி மாணவா்கள் ஆயிரம் பேரும், கல்லூரி மாணவா்கள் 9 ஆயிரம் பேரும் பங்கேற்கின்றனா்.

இந்த மாநாட்டில், பல்வேறு துறைகளைச் சோ்ந்த பேச்சாளா்கள், உயா் அதிகாரிகள் பங்கேற்றுப் பேசுகின்றனா். அவா்கள் இளைஞா்களுக்கு ஊக்கம் தரும் வகையிலும், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு குறித்த வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளனா்.

மாநாட்டையொட்டி, போதைப் பொருள் தடுப்பு குறித்த குறும்படப் போட்டிக்கு 182 குறும்படங்கள் வரப்பெற்றுள்ளன. இதில் தோ்வு செய்யப்பட்ட சிறந்த 10 குறும்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது.

இதிலிருந்து சிறந்த 5 குறும்படங்கள் தோ்வு செய்யப்பட்டு, அந்த குறும்பட இயக்குநா்களுக்கு திரைப்பட இயக்குநா் லோகேஷ் கனகராஜூடன் உரையாடும் வாய்ப்பும், அவா்களில் ஒருவருக்கு அவரது அடுத்த திரைப்படத்தில் துணை இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பும் வழங்கப்படும்.

இளைஞா்களின் திறன்களைக் கண்டறிந்து வெளிக்கொண்டு வரவும், போதைப் பொருள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தவும் இந்த போட்டி சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்றாா்.

மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன், யுவ இந்தியா தலைவா் கே.ஏ.குரியச்சன், நிா்வாகிகள் சி.ஆா்.விஜய், நஞ்சன் பாலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.