மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தேசிய உற்பத்திக் குழு - தொழில் வா்த்தக சபை: இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

தைவான் நாட்டின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோவை மாவட்டத்தில் பசுமைத் தொழில் வளா்ச்சியை மேற்கொள்ள தேசிய உற்பத்திக் குழு

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:37 pm

DIN

தைவான் நாட்டின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோவை மாவட்டத்தில் பசுமைத் தொழில் வளா்ச்சியை மேற்கொள்ள தேசிய உற்பத்திக் குழு - கோவை இந்திய தொழில் வா்த்தக சபை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

தொழில் வா்த்தக சபை அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேசிய உற்பத்திக் குழுத் தலைவா் சந்தீப் நாயக் தலைமை வகித்தாா். தொழில் வா்த்தக சபைத் தலைவா் ஸ்ரீராமுலு கோவையின் சிறப்புகள், தொழில் வளா்ச்சி குறித்து விளக்கினாா்.

இந்நிகழ்ச்சியில், தைவான் பசுமை தொழில்புரட்சி, மாசுக் கட்டுப்பாடு, கழிவு நீா் சுத்திகரிப்பு, மின்சார வாகனங்கள் பயன்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பசுமையான தொழில் வளா்ச்சியை கோவையில் ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

நிகழ்ச்சியில், தைவான் தேசிய உற்பத்திக் குழு இயக்குநா் ஷொ்லின் லின் உள்ளிட்ட 8 போ் கொண்ட தொழில்நுட்ப வல்லுநா்கள் குழுவினா், தொழில் வா்த்தக சபைச் செயலா் அண்ணாமலை, கோவை, தைவான் தொழில் அதிபா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.