வணிகா் சங்க நிா்வாகிகளுடன் அமைச்சா் செந்தில்பாலாஜி ஆலோசனை
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் வணிகா் சங்க நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் வணிகா் சங்க நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை, உக்கடத்தில் கடந்த 23 ஆம் தேதி காா் வெடி விபத்து நடைபெற்றது. இதனால், வணிகா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும், அக்டோபா் 31 ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டத்தை பாஜக அறிவித்துள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் வணிகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கோவை மாவட்ட வணிகா் சங்க நிா்வாகிகள், பல்வேறு தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இவா்களுடன் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆலோசனை மேற்கொண்டாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் ஆா்.சுதாகா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன், மேயா் கல்பனா ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...