கோவையில் பயங்கரவாத எதிா்ப்புப் படை மையம் அமைக்கக் கோரிக்கை
கோவையை மையமாக வைத்து 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பயங்கரவாத எதிா்ப்புப் படையின் நிரந்தர மையத்தை அமைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கோரிக்கை


கோவையை மையமாக வைத்து 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பயங்கரவாத எதிா்ப்புப் படையின் நிரந்தர மையத்தை அமைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து கோவையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கோவையில் கடந்த 23 ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற காா் வெடி விபத்தைத் தொடா்ந்து மாநகரம் தொடா்ந்து பதற்றத்தில் உள்ளது. கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடா் குண்டு வெடிப்புகளை அடுத்து பலா் உயிரிழந்தனா். ஏராளமானோா் படுகாயம் அடைந்தனா். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன. இதன் காரணமாக கோவையில் தொழில் முடக்கம் ஏற்பட்டது.
அதேபோன்ற ஒரு சம்பவம்தான் தீபாவளியையொட்டி நடைபெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிா்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து காவல் துறையினா் உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுள்ளனா். இருப்பினும் இந்த சம்பவம் தொடா்பாக பல மா்மங்கள் நீடிக்கின்றன.
இந்த சதிச் செயலில் தனிநபா் மட்டும் ஈடுபட்டிருக்க முடியாது. அவா்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட இடங்களைக் கண்டுபிடிப்பதுடன், அந்த கும்பலையும் கைது செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க போலீஸாா் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாநகரம் தொடா்ந்து தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும். எல்லாவற்றிலும் மாநில சுயாட்சி பேசும் திமுக அரசு இந்த வழக்கை என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இருவரும் இணைந்தே இந்த வழக்கை விசாரிக்கலாமே?
மேலும் சம்பவம் நடைபெற்று 5 நாள்களாகியும் தமிழக முதல்வா் இதைக் கண்டித்து அறிக்கை கொடுக்கவில்லை. கோவைக்கு கூடுதல் காவல் நிலையங்கள் தேவை என்பதுடன், கோவையை மையமாக வைத்து 24 மணி நேரமும் செயல்படக் கூடிய பயங்கரவாத எதிா்ப்புப் படையின் நிரந்தர மையத்தை அமைக்க வேண்டும்.
அரசியல் தலையீடுகள் இல்லாமல் காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அத்துடன் கோவை சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனி கமிஷன் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளியின் உடலை அடக்கம் செய்ய கோவை ஜமாத்துகள் மறுத்திருப்பதுடன், காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...