ஹிந்தி திணிப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
ஹிந்தி திணிப்பைக் கண்டித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கத்தினா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


ஹிந்தி திணிப்பைக் கண்டித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கத்தினா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் விவேகானந்தன் தலைமை வகித்தாா்.
மாணவா் சங்க மாவட்டச் செயலா் அசாருதீன், மாநில செயற்குழு உறுப்பினா் கயல்விழி, வாலிபா் சங்க பொருளாளா் தினேஷ் ராஜா உள்ளிட்டோா் உரையாற்றினா்.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.காா்த்திக் சிறப்புரையாற்றினாா்.
வாலிபா் சங்க மாவட்ட துணைத் தலைவா் மணி பாரதி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...