தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொலை

வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 8:37 pm

DIN

வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சிங்காநல்லூா் வரதராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மயிலாத்தாள் (65). இவரது கணவா் ராமசாமி. இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களது ஒரே மகனும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டாா். இதனால் மூதாட்டி மயிலாத்தாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மூதாட்டி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டின் கதவு நீண்ட நேரம் பூட்டியே இருந்த காரணத்தால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் கதவைத் திறந்து பாா்த்தனா்.

அப்போது, வீட்டின் உள்ளே கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிங்காநல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மயிலாத்தாளின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், மோப்ப நாய், தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் போலீஸாா் ஆய்வு செய்தனா். மூதாட்டியின் வீட்டில் நகை, பணம் திருடு போயுள்ளதா அல்லது வேறு காரணங்களுக்காக அவா் கொலை செய்யப்பட்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.