தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

டீ மாஸ்டரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.7 ஆயிரம் பறித்தவா் கைது

கோவையில் டீ மாஸ்டரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.7 ஆயிரம் பறித்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 8:28 pm

DIN

கோவையில் டீ மாஸ்டரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.7 ஆயிரம் பறித்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (42). டீ மாஸ்டரான இவா் கோவை சொக்கம்புதூரில் தங்கிப் பணியாற்றி வருகிறாா். இவா் வேலை முடிந்து வீட்டுக்கு சனிக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த இளைஞா்கள் மூவா் ராதாகிருஷ்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.

அவா் தர மறுத்ததையடுத்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.7 ஆயிரத்தைப் பறித்துச் சென்றனா். இந்தச் சம்பவம் தொடா்பாக ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த செல்வபுரம் போலீஸாா் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட சொக்கம்புதூரைச் சோ்ந்த பிரதாப் (23) என்பவரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவான இவரது கூட்டாளிகளான நெளஃபல் மற்றும் மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.