தோட்டத் தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தல்

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்த தின கூலிக்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தியும், இடைக்கால ஒப்பந்தம்
தோட்டத் தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தல்

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்த தின கூலிக்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தியும், இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திய தொழிற்சங்கங்களை கண்டித்தும் தொழிலாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கையொப்பம் பெறப்பட்டது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச தின கூலியாக ரூ.425.40 என அரசு அறிவித்தது. ஆனால், அரசாணை வெளியிடாமல் உள்ளதால் அரசு அறிவித்த தின கூலி பல மாதங்கள் ஆகியும் பெற முடியாமல் உள்ளது. இதற்கிடையே தின கூலியாக ரூ.395க்கு எஸ்டேட் நிா்வாகத்தினருடன் 5 தொழிற்சங்கத்தினா் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளனா்.

இந்நிலையில் அரசு அறிவித்த தின கூலியை தோட்டத் தொழிலாளா்கள் பெற அரசாணையை வெளியிட வலியுறுத்தியும், இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திய தொழிற்சங்கங்களை கண்டித்தும் வால்பாறை தோட்டத் தொழிலாளா் பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் தொழிலாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கையொப்பம் பெறப்பட்டது.

இதில் கல்யாணி (மதிமுக), பிரபாகரன் (ஐஎன்டியூசி), மாணிக்கம் (ஹெச்எம்எஸ்), அன்பழகன் (கொங்குநாடு) உளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com