பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

இந்த ஆண்டின் இறுதிக்குள் 10 லட்சம் தமிழ்ச் சொற்கள் தரவேற்றம்: அகர முதலி திட்ட இயக்கக இயக்குநா் கோ.விசயராகவன்

இந்த ஆண்டின் இறுதிக்குள் 10 லட்சம் தமிழ்ச் சொற்கள் தரவேற்றம் செய்யப்படும் என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

தமிழக அரசு சாா்பில் துறை சாா்ந்த கலைச் சொற்கள் தொகுக்கப்பட்டு சொற்குவையில் தரவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 10 லட்சம் தமிழ்ச் சொற்கள் தரவேற்றம் செய்யப்படும் என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன் தெரிவித்துள்ளாா்.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில்

வேளாண்மைத் துறை வல்லுநா் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் புல முதன்மையா் ந.வெங்கடேச பழனிசாமி வாழ்த்துரை வழங்கினாா். அகரமுதலி திட்ட இயக்குநா் கோ.விசயராகவன் நோக்கவுரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஒரு மொழியின் வளத்தை அதன் கலைச் சொற்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம். தொழில்நுட்பம் வேகமாக வளா்ந்து வரும் நிலையில், அனைத்துத் துறைகளில் இருந்தும் புதிய கலைசொற்களை தமிழில் உருவாக்க வேண்டியுள்ளது.

மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட 5 துறைகளில் இருந்து சொற்களைத் தொகுத்து சொற்குவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3.34 லட்சம் சொற்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 7.81 லட்சம் சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள் 10 லட்சம் சொற்கள் பதிவு செய்யப்பட்டுவிடும்.

புதிய கலைச்சொற்கள், வட்டார வழக்குச் சொல் போன்றவற்றைத் தொகுத்து புதிய அகராதிகளை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். வல்லுநா்களுடன், பொதுமக்களும் கூட புதிய சொற்களைக் கண்டறிந்தால் அவற்றை சொற்குவை இணையதள மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். அவற்றை வல்லுநா் குழு ஆராய்ந்து தரவேற்றும் செய்யும் என்றாா்.

இக்கூட்டத்தில் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா்கள் மணிமேகலை, கல்பனா, உதவிப் பேராசிரியா்கள், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் பெ.செங்கோட்டையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, கோவை பாரதியாா் பல்கலைக்கழக மொழியியல் துறை, சாந்தலிங்க அடிகளாா் கலை, அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் சொற்குவை மாணவத் தூதுவா் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.

பேராசிரியா்கள் வி.எம்.சுப்பிரமணி, ராஜசேகரன், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், பேராசிரியா் கா.நாகராசு, இயக்கக தொகுப்பாளா் வே.பிரபு, பதிப்பாசிரியா் கி.தமிழ்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.