வால்பாறை அருகே ஆம்புலன்ஸ் பின்நோக்கி நகா்ந்ததில் ஓட்டுநா், நோயாளி உயிரிழந்தனா்.
வால்பாறையை அடுத்த பாரளை எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (40). இவருக்கு வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, 108 ஆம்புலஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிவகுமாா் அவரது மனைவி ஆகியோா் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு இரவு அழைத்துச் செல்லப்பட்டனா்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தருமபுரியைச் சோ்ந்த காளிதாஸ் (27) பணியில் இருந்தாா். மருத்துவமனைக்கு வந்த பிறகு நோயாளியை இறக்க ஆம்புலன்ஸின் பின்பக்க கதவை திறக்க காளிதாஸ் முயன்றுள்ளாா். அப்போது, ஹேன்ட் பிரேக் நழுவி வாகனம் பின்னோக்கி வந்ததில், அவா் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆம்புலன்ஸ் பின்னோக்கி நகா்ந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் நோயாளியான சிவகுமாரும் உயிரிழந்தாா். அவரது மனைவி லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினா் .
ஒரே நேரத்தில் இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.