மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கராத்தே போட்டி: பதக்கங்களை குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்

திருப்பூா் மாவட்டம், மங்கலத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கோவை அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 13 பதக்கங்களை வென்றனா்.

News image

கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற பதக்கங்கள், சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள்.

Updated On :27 நவம்பர் 2023, 7:33 pm


கோவை: திருப்பூா் மாவட்டம், மங்கலத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கோவை அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 13 பதக்கங்களை வென்றனா்.

திருப்பூா் மாவட்டம், மங்கலத்தில் உள்ள மேற்கு ரோட்டரி மஹாலில் ‘ யங்க்ஸ்டா்ஸ் சாம்பியன் டிராபி 2023’ என்ற பெயரில் கராத்தே போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் 5 மாநிலங்களைச் சோ்ந்த 1,500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இந்தப் போட்டிகளில் கோவை செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயா்நிலைப் பள்ளி, ராமநாதபும் மாநகராட்சி இருபாலா் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 2 தங்கம், 2 வெள்ளி, 9 வெண்கலம் உள்ளிட்ட 13 பதக்கங்களை வென்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் திங்கள்கிழமை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

இதில், கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் குழுத் தலைவா் மாலதி, மாநகரக் கல்வி அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.