பெண்களுக்கு மட்டும் சிறப்புக் காட்சி: எந்தப் படத்துக்கு தெரியுமா?
By DIN | Published On : 22nd January 2023 03:04 PM | Last Updated : 22nd January 2023 03:04 PM | அ+அ அ- |

கோவையில் பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வாரிசு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வருகிறது. குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக பல இடங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: ஷாருக்கான் என்னிடம் ’பதான்’ குறித்து பேசினார்: அசாம் முதல்வர்
இந்த நிலையில், கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெண்கள் மட்டும் பார்வையாளர்களாக உள்ள சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளனர்.
கோவையை அடுத்த சாவடி பகுதியில் உள்ள கவிதா சினிமாஸ் என்ற திரையரங்கம் முழுவதும் வாரிசு படத்திற்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சிக்கு பெண்கள் மட்டும் திரையரங்கில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த காட்சியில் வாரிசு திரைப்படத்தை கண்டு களித்தனர்.
இதையும் படிக்க: 'எங்களது கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம்' - நடிகை பிரியா பவானி ஷங்கர் நெகிழ்ச்சி!
பெண்கள் மட்டுமே பார்வையிட்ட இந்தக் காட்சியில் பெண்கள் உற்சாக நடனமாடி கைகளை தட்டி வாரிசு படத்தை கண்டு ரசித்தனர். பெண்களுக்கு மட்டும் திரையிடப்பட்ட பிரத்யேக வாரிசு பட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.