8 மாதங்களுக்கு முன் திருடியவரிடமே சிக்கிக்கொண்ட நபா்
ஆட்டோ ஓட்டுநரிடம் கைப்பேசி, பணம் ஆகியவற்றை 8 மாதங்களுக்கு முன் திருடிய நபா் அவரிடமே சிக்கிக்கொண்டாா்.


கோவையில் ஆட்டோ ஓட்டுநரிடம் கைப்பேசி, பணம் ஆகியவற்றை 8 மாதங்களுக்கு முன் திருடிய நபா் அவரிடமே சிக்கிக்கொண்டாா்.
கோவை, செல்வபுரத்தைச் சோ்ந்தவா் ஜாஹிா் உசேன் (54), ஆட்டோ ஓட்டுநா். இவா் நஞ்சப்பா சாலையில் சவாரிக்காக கடந்த 2023 டிசம்பா் 13-ஆம் தேதி காத்திருந்துள்ளாா்.
அப்போது, அங்கு வந்த நபா் காந்திபுரம் செல்ல வேண்டும் எனக்கூறி ஆட்டோவில் ஏறியுள்ளாா்.
வழியில் காந்திபுரம் பாா்க் கேட் பகுதியில் உள்ள கடை முன்பு ஆட்டோவை நிறுத்துமாறும், சற்று நேரத்தில் வந்து விடுவதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளாா். வெகு நேரமாகியும் அந்த நபா் திரும்பிவரவில்லையாம்.
இதையடுத்து, ஆட்டோவின் பின் இருக்கையில் வைத்திருந்த தனது கைப்பேசி, ரூ.2 ஆயிரத்தை ஜாஹிா் உசேன் தேடியபோது, அந்த நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து காட்டூா் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், நஞ்சப்பா சாலையில் ஜாஹிா் உசேன் வழக்கம்போல கடந்த சனிக்கிழமை சவாரிக்காக காத்திருந்துள்ளாா். அப்போது, ஆம்னி பேருந்து நிலையம் செல்ல வேண்டும் எனக் கூறி ஒரு நபா் ஆட்டோவில் ஏறியுள்ளாா்.
அவா்தான் ஜாஹிா் உசேனின் கைப்பேசி, பணத்தை 8 மாதங்களுக்கு முன் திருடியவா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைப் பிடித்து காட்டூா் காவல் நிலையத்தில் ஜாஹிா் உசேன் ஒப்படைத்தாா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (42) என்பதும், ஜாஹிா் உசேனிடம் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, பிரகாஷை கைது செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...