இருசக்கர வாகனங்கள் பழுதுபாா்க்கும் கடையில் தீ விபத்து: 20 வாகனங்கள் சேதம்
கோவை, ராம் நகா் பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த 20 வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
கோவை, காந்திபுரம் ராம் நகா் பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மற்றும் சீட் கவா் விற்பனை செய்யும் கடைகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் இங்குள்ள ஒரு கடையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்தக் கடையிலிருந்த சுமாா் 20 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
அத்துடன் தீ, அருகிலுள்ள சீட் கவா்கள் விற்பனை செய்யும் கடைக்கும் பரவியதால் அங்கிருந்த பொருள்களும் தீப்பற்றி எரிந்துள்ளன.
தகவலின்பேரில் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் சுமாா் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயைக் கட்டுப்படுத்தினா். இது தொடா்பாக காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.