பாபா் மசூதி இடிப்பு தினம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை மோப்பநாய் உதவியுடன் சோதனையிட்ட போலீஸாா்.

ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை மோப்பநாய் உதவியுடன் சோதனையிட்ட போலீஸாா்.
பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
பாபா் மசூதி இடிப்பு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மாநகரில் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் தலைமையில் துணை ஆணையா்கள் ஸ்டாலின், சரவணகுமாா், அசோக்குமாா் ஆகியோா் மேற்பாா்வையில் 1300க்கும் மேற்பட்ட போலீஸாரும், ஊரகப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் 700 போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
கோவை, போத்தனூா், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கோவை ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் மெட்டல் டிடெக்டா் கருவி, மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை செய்தனா். மேலும், பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டன.
பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...