நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:48 pm

Din

கோவை மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், பொதுப்பெயா் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல் கட்டமாக ஆயிரம் முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தாா்.

அதன்படி, முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்று பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதல் பெற்றவா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ன்க்ட்ஹப்ஸ்ஹழ்ம்ஹழ்ன்ய்க்ட்ஹஞ்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள தொழில்முனைவோா் டிசம்பா் 10-ஆம் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.