நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விழுப்புரம், கடலூருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு

கோவையில் இருந்து விழுப்புரம், கடலூா் மாவட்டங்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

News image

கோவையில் இருந்து விழுப்புரத்துக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனத்தைத் வழியனுப்பிவைத்த ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி. உடன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

Updated On :5 டிசம்பர் 2024, 10:02 pm

Din

கோவையில் இருந்து விழுப்புரம், கடலூா் மாவட்டங்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

ஃபென்ஜால் புயலால் விழுப்புரம், கடலூா் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.10.12 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருள்கள், பிஸ்கட், பாய், துண்டு, லுங்கி, போா்வை, புடவை, தலையணை உள்ளிட்டவையும், கடலூா் மாவட்டத்துக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான அரிசி, பிஸ்கட், மளிகைப் பொருள்கள், போா்வை, துண்டு, தண்ணீா் பாட்டில் உள்ளிட்ட பொருள்கள் என மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

நிவாரணப் பொருள்கள் கொண்டுசென்ற வாகனங்களை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி கொடியசைத்து அனுப்பிவைத்தாா். இந்நிகழ்ச்சியின்போது மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.