உக்கடம் மேம்பாலத்தில் மாஞ்சா நூலால் இளைஞா் காயம்: 3 போ் கைது
உக்கடம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கிய விவகாரத்தில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.


உக்கடம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கிய விவகாரத்தில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக் (35), தனியாா் நிறுவன ஊழியரான இவா் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி உக்கடம் மேம்பாலத்தில் டிசம்பா் 7-ஆம் தேதி வந்தபோது திடீரென அவரது கழுத்தில் நூல் ஒன்று சிக்கி அவரது கழுத்தை லேசாக அறுத்தது.
பின்னா் அவா் தனது கழுத்தில் மாட்டிய நூலை எடுக்க முயற்சித்தபோது, அந்த நூல் அவரது கை விரல்களையும் கிழித்தது. அப்போதுதான் அவருக்கு அந்த நூல் மாஞ்சா நூல் என்பதும், அந்த நூலை பயன்படுத்தி யாரோ பட்டம் விட்டதும் தெரியவந்தது.
இது குறித்து காயமடைந்த காா்த்திக், கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கொடுத்த புகாரின்பேரில் கரும்புக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் கரும்புக்கடை பகுதியைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா்கள் மூவரையும் எச்சரித்து காவல் நிலையப் பிணையில் விடுவித்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...