பொள்ளாச்சியில் ரூ.8.03 கோடியில் திட்டப் பணிகள்
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ரூ.8.03 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

வெள்ளாளபாளையத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா் செந்தில் பாலாஜி. உடன், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி எம்.பி. கா.ஈஸ்வரசாமி உள்ளிட்டோா்.









