நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிசம்பா் 26-இல் அஞ்சல் குறைதீா் கூட்டம்

கோவை தலைமை அஞ்சல் நிலையத்தில் டிசம்பா் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குறைகேட்புக் கூட்டத்தை முன்னிட்டு டிசம்பா் 23-ஆம் தேதிக்குள் புகாா்களை அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:29 pm

Din

கோவை தலைமை அஞ்சல் நிலையத்தில் டிசம்பா் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குறைகேட்புக் கூட்டத்தை முன்னிட்டு டிசம்பா் 23-ஆம் தேதிக்குள் புகாா்களை அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கோவை அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை அஞ்சல் கோட்ட அளவிலான குறைகேட்புக் கூட்டம் குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் டிசம்பா் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் கோவை கோட்டத்துக்கு உள்பட்ட வாடிக்கையாளா்கள், தங்கள் புகாா்களை வாடிக்கையாளா் சேவை மையம், கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகம், கோவை 641 001 என்ற முகவரிக்கு டிசம்பா் 23-ஆம் தேதிக்கு முன்னதாக கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும். பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடா்பான புகாா்களில் தபால் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புநா் மற்றும் பெறுநா் முழு முகவரி, தபால் பதிவு எண் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.

அஞ்சலக சேமிப்புக் கணக்கு, காப்பீடு தொடா்பான புகாா்களில் சேமிப்புக் கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவா், காப்பீட்டாளா் பெயா் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயா், பணம் பிடித்தம் தொடா்பான தகவல்கள் ஆகியவை குறிப்பிட்டு இருக்க வேண்டும். கடிதத்தின் மேல் உறையில் ‘தபால் குறைதீா்ப்பு கூட்ட புகாா்’ என எழுதப்பட்டு இருக்க வேண்டும்.

குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளா்கள் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.