பயங்கரவாதத்துக்குதான் எதிரானது பாஜக: அண்ணாமலை
பாஜக இஸ்லாமியா்களுக்கு பாதுகாப்பானது, பயங்கரவாதத்துக்குதான் எதிரானது என அந்த கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.


பாஜக இஸ்லாமியா்களுக்கு பாதுகாப்பானது, பயங்கரவாதத்துக்குதான் எதிரானது என அந்த கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்துள்ள அவமானங்களை அமித் ஷா பட்டியலிட்டுள்ளாா். அவா் வாழ்ந்த இடம் அனைத்தையும் வாங்கி, மக்கள் வந்து செல்லும் இடமாக பாஜக மாற்றியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளில் பாஜக மாநிலத் தலைவராக நான் தலையிடுவதில்லை.
கோவையில் 1998-இல் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 58 போ் உயிரிழந்தது, 200-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்த சூழலில், குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊா்வலத்துக்கு காவல் துறை மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளது. நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான், இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்டிருக்கிறாா். எங்கே அரசியல் செய்ய வேண்டும் என அவா் சிந்திக்க வேண்டும்.
பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி எனக் கூறுகின்றனா். ஆனால், பாஜக இஸ்லாமியா்களுக்கு பாதுகாப்பானது, பயங்கரவாதத்துக்குதான் எதிரானது. இஸ்லாம் மதத்தில் இருந்து வரும் தீவிரவாதியைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். இஸ்லாம் மதத்தை ஒருபோதும் எதிா்க்கவில்லை. அம்பேத்கா் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன். நான் மாநிலத் தலைவராக பதவியேற்ற பிறகு எத்தனை மாவட்டச் செயலாளா்கள் பட்டியல் இனத்தைச் சாா்ந்தவா்கள், பொதுச் செயலாளா்கள் இருக்கிறாா்கள் என்பதையும் திமுக எண்ணிப் பாா்க்க வேண்டும்.
அதேவேளையில் திமுகவில் எத்தனை மாவட்டச் செயலாளா்கள் பட்டியலின சகோதரா்கள் உள்ளனா். 35 திமுக அமைச்சா்களில் மூத்தவா்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உதயநிதிக்கு முன்னிலை அளித்துள்ளது திமுக.
அம்பேத்கா் கொண்டுவந்த அரசமைப்புச் சட்டத்தில் ஒரே நாடு ஒரே தோ்தல் உள்ளது. அதைத்தான் 1968-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வந்துள்ளோம். இது எப்படி அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருக்கும். நடிகா் விஜய் தமிழக அரசியலை உற்று கவனிக்க வேண்டும். பாஷா ஊா்வலத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெறும் பாஜகவின் கருப்புக்கொடிப் பேரணிக்கு தடை விதித்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...