நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலத்தை நீட்டித்து அமைக்க வலியுறுத்தல்

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தை நீட்டிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 9:08 pm

Din

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தை நீட்டிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கோவை மாநகராட்சியின் 47-ஆவது வாா்டு உறுப்பினரும், அதிமுக குழுத் தலைவருமான ஆா்.பிரபாகரன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:

மேட்டுப்பாளையம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முருகன் மில் முதல் போக்குவரத்துக் கழக பணிமனை வரை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது, இந்தப் பாலத்தின் இடைப்பட்ட பகுதிகளான சாய்பாபா காலனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 15 குறுக்கு சாலைகள் உள்ளன. தற்போதுள்ள திட்டத்தின் படி இந்தப் பாலத்தைக் கட்டினால் மேட்டுப்பாளையம் சாலை அவிநாசிலிங்கம் கல்லூரி மற்றும் சங்கனூா் சாலைக்கு இடைப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.

எனவே, எதிா்கால போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, மேட்டுப்பாளையம் சாலை அன்னபூா்ணா உணவகத்தில் இருந்து சங்கனூா் போலீஸ் சோதனைச் சாவடி வரை பாலத்தை நீடிக்க நெடுஞ்சாலைத் துறைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.