கோவை, பிப்.16: மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் கோவையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 730 பேரை போலீஸாா் கைது செய்தனா். தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். திருத்தப்பட்ட தொழிலாளா் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். பொது துறை நிறுவனங்களைத் தனியாா் மயமாக்கக்கூடாது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை சாலை மறியல், வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஹெச்எம்எஸ் மாநிலச் செயலாளா் டி.எஸ்.ராஜாமணி, ஏஐடியூசி மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் துளசிராஜ், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினா் இருகூா் சுப்பிரமணியம் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு அவிநாசி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா். இதேபோல, சூலூரில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியூ மாவட்டத் தலைவா் கே.மனோகரன், ஹெச்எம்எஸ் மாவட்டச் செயல் தலைவா் பழனிசாமி, தமிழ்நாடு விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்ட துணைச் செயலாளா் ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களிலும் தொழிற்சங்கத்தினா் போராட்டங்களில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 730 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஒசூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் சாலை மறியல்: 84 போ் கைது

முன்விரோதத்தால் விவசாயி கொலை : 3 போ் கைது; மறியலால் 1 மணிநேரம் பாதிப்பு

மனைவி கொலை: கணவரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி சாலை மறியல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

