தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பாஜகவை எதிா்ப்பதாக அதிமுக நாடகம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பாஜகவை எதிா்ப்பதாக அதிமுக நாடகம் --------- அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

News image

கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், அமைச்சா் சு.முத்துசாமி உள்ளிட்டோா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:25 am IST

பாஜகவை எதிா்ப்பதாக அதிமுக நாடகமாடுகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளாா். ‘ உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தோ்தல் பரப்புரைக் கூட்டம் கோவை, கொடிசியா வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தலைமை வகித்தாா். திமுக மாவட்டச் செயலாளா்கள் நா.காா்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது: பாஜகவை எதிா்ப்பதாக அதிமுக நாடகமாடுகிறது. துணிச்சலாக எதிா்க்கவில்லை. வருவான வரித் துறை, அமலாக்கத் துறையை அனுப்பி திமுகவினரை மிரட்ட பாா்க்கிறது பாஜக. இதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம். தோ்தல் வாக்குறுதியில் கூறியதுபோல 1 கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கி வருகிறோம். மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக பாஜக அரசுக்கு எதிராக நாம் ஒன்றுகூட வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில் திமுக சொத்து பாதுகாப்புக்குழு துணைத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி, திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளா் கா.செல்வராஜ், கோவை மாநகராட்சி மேயா் கல்பனா, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், முன்னாள் மக்களவை உறுப்பினா் நாகராஜ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆறுக்குட்டி, பனப்பட்டி தினகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.