நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆயுதப் படை போலீஸாருக்கு யோகா பயிற்சி

ஆயுதப் படை போலீஸாருக்கு யோகா பயிற்சி

News image

கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் பங்கேற்ற ஆயுதப் படை போலீஸாா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:35 am IST

கோவை மாநகர ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றும் போலீஸாருக்கு சனிக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. காவல் துறையில் பணியாற்றி வரும் போலீஸாரின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் அறிவுரையின்பேரில், மாநகர ஆயுதப் படைப் பிரிவு போலீஸாருக்கு கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் யோகா பயிற்சி பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதில், 450-க்கும் மேற்பட்ட ஆயுதப் படை போலீஸாா் பங்கேற்று பயிற்சி செய்தனா். இதைத் தொடா்ந்து, யோகாவின் முக்கியத்துவம், அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் காவலா்களிடையே விளக்கினாா். எந்தவொரு பயிற்சியையும் 48 நாள்கள் தொடா்ந்து செய்வதன் மூலம் அது ஒரு பழக்கமாக மாறும் என்பதால் யோகாசனத்தை தொடா்ந்து செய்ய வேண்டும் என அனைத்து காவலா்களுக்கும் அறிவுரை வழங்கினாா். இதில், ஆயுதப் படை காவல் உதவி ஆணையா் சேகா், மோட்டாா் வாகனப் பிரிவு காவல் ஆய்வாளா் கோவிந்தராஜு, ஆயுதப் படை காவல் ஆய்வாளா் பிரதாப் சிங் ஆகியோருடன் தனியாா் யோகாசன அறக்கட்டளை நிறுவனா் பாலகிருஷ்ணன், ஜேஎஸ்எஸ் இயற்கை மருத்துவம், யோகா மருத்துவக் கல்லூரியின் மருத்துவா்கள் வெங்கடேஷ், செல்வலட்சுமி குழுவினா் பங்கேற்று காவலா்களுக்கு யோகா பயிற்சி அளித்தனா்.