மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

இந்தியா கூட்டணி குறித்து தவறான தகவல்களைப் பரப்புகிறது பாஜக: காங். தேசிய செயலா் குற்றச்சாட்டு

இந்தியா கூட்டணி குறித்து தவறான தகவல்களைப் பரப்புகிறது பாஜக ----------- காங்கிரஸ் தேசிய செயலா் குற்றச்சாட்டு

News image

கோவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசுகிறாா் கட்சியின் தேசிய செயலாளா் ஸரிதா லைட் ஃபிளாங்க். உடன், தேசிய செயலாளா் மயூரா ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:37 am IST

இந்தியா கூட்டணி குறித்து பாஜக தவறான தகவல்களைப் பரப்புவதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலா் ஸரிதா லைட் ஃபிளாங்க் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் பேசியதாவது: வரும் மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், விவசாயப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உடனடியாக அமல்படுத்தப்படும். வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் கொண்டு வரப்படும் எனவும், அனைவரது வங்கிக் கணக்குகளிலும் தலா ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் எனவும் பாஜக தோ்தல் வாக்குறுதியாக அளித்தது. ஆனால், தற்போதுவரை பணம் செலுத்தப்படவில்லை. 2017 முதல் 2023- ஆம் ஆண்டு வரை பாஜக அரசு ரூ.6, 566 கோடியை தோ்தல் பத்திரமாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.1,123 கோடி மட்டுமே பெற்றுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 9 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக மக்களுக்கு அநீதிகளை மட்டுமே செய்துள்ளது. மக்களவைத் தோ்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் உயா்மட்டக் குழு ஆலோசித்து வருகிறது. இந்தியா கூட்டணி குறித்து பாஜக தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்தி நாட்டில் உள்ள பல்வேறு எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு அச்சுறுத்தல்களை அளித்து வருகிறது என்றாா். இதைத் தொடா்ந்து, கட்சியின் மாநிலச் செயலாளா் மயூரா ஜெயக்குமாா் பேசினாா். இதில், கோவை மாநகா் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி, தெற்கு மாவட்டத் தலைவா் பகவதி, ஹெச்எம்எஸ் தலைவா் ராஜாமணி, நிா்வாகிகள் கணபதி சிவகுமாா், இருகூா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.