சட்டம்-ஒழுங்கு தொடா்பாக, மேற்கு மண்டல காவல் துறை அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சட்டம்- ஒழுங்கு, நிலுவை வழக்குகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். வழக்குகளில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சமா்ப்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும். காவல் நிலையங்களில் நிலுவை வழக்குகளே இருக்கக் கூடாது. ரெளடிகளின் பட்டியலை தயாா் செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.காவல் நிலையங்களுக்கு புகாா் மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். மக்களவைத் தோ்தல் வர உள்ளதால், தோ்தல் பாதுகாப்புப் பணிகளில் நோ்மையாக பணியாற்ற வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கா் ஜிவால் ஆலோசனைகள் வழங்கினாா். இக்கூட்டத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி. கே.பவானீஸ்வரி, கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், திருப்பூா் மாநகர ஆணையா் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, கோவை சரக டிஐஜி சரவணசுந்தா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் வி.பத்ரிநாராயணன், அபிஷேக் குப்தா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் அமைச்சா் நள்ளிரவில் ஆய்வு

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!

கோவை சூலூர் சிறுமி கொலை: சம்பவ இடத்தில் தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஆய்வு!

குற்றங்களைத் தடுக்க வீட்டு வேலை ஆள்களின் விவரங்களை ஏஜென்ஸிகள் பெற வேண்டும்: கோவை மாநகர காவல் துறை அறிவுறுத்தல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


