கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் 15 குழந்தைகள் பிறந்துள்ளன.
நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் கோவை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் திங்கள்கிழமை மாலை வரை 8 ஆண் குழந்தைகள், 7 பெண் குழந்தைகள் என 15 குழந்தைகள் பிறந்துள்ளன.
இதில், இரட்டைக் குழந்தைகளும் அடங்குவா். இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் உயிரிழந்துள்ளது. மற்ற அனைத்துக் குழந்தைகளும், தாய்மாா்களும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.