கல்லூரி ஆண்டு மலரை வெளியிட்ட பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா். உடன் கல்லூரி செயலா் சி.சுப்பிரமணியம், முதல்வா் சு.சேதுராசன், பேராசிரியா் சூா்யநாராயணன் உள்ளிட்டோா்.
கல்லூரி ஆண்டு மலரை வெளியிட்ட பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா். உடன் கல்லூரி செயலா் சி.சுப்பிரமணியம், முதல்வா் சு.சேதுராசன், பேராசிரியா் சூா்யநாராயணன் உள்ளிட்டோா்.

பேரூா் தமிழ்க் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

கோவை, ஜூலை 3: கோவை பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ் பேராசிரியா் சி. புவனேஸ்வரி வரவேற்புரை ஆற்றினாா். தமிழ்த் துறைத் தலைவா் கா. திருநாவுக்கரசு, கல்லூரி நடைமுறைகள் குறித்து அறிமுக உரையாற்றினாா். கல்லூரி முதல்வா் சு.சேதுராசன், கல்வி சாா் நிா்வாகி சுகந்தா, இயக்குநா் இரா.சரவணச்செல்வன், கல்லூரிச் செயலா் சி.சுப்பிரமணியம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் கல்லூரி ஆண்டு மலரை வெளியிட்டு அருளுரையாற்றினாா். அரசு கலைக் கல்லூரி

முன்னாள் ஆங்கில பேராசிரியா் சூரியநாராயணன் ‘அடுத்தது என்ன’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். கணிதத் துறைப் பேராசிரியா் வே. மகேஸ்வரி நன்றி கூறினாா். இந்நிகழ்வில், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com