தமிழ்ச் செம்மல் விருதுக்கு ஆகஸ்ட் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழ் வளா்ச்சித் துறை வழங்கும் தமிழ்ச் செம்மல் விருதுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.


தமிழ் வளா்ச்சித் துறை வழங்கும் தமிழ்ச் செம்மல் விருதுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சிக்காக பணியாற்றி வரும் ஆா்வலா்களைக் கண்டறிந்து அவா்களின் தமிழ்த் தொண்டை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து ஒரு தமிழ் ஆா்வலரைத் தோ்வு செய்து தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது ரூ.25 ஆயிரம் ரொக்கத்துடன் தகுதியுரையை உள்ளடக்கியது. 2024ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கான விண்ணப்பங்களை தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை நிறைவு செய்து தன்விவரக் குறிப்புகளுடன் வட்டாட்சியா் வழங்கும் குடியிருப்புச் சான்று, ஆதாா் அட்டை நகல், நூல், கட்டுரை வெளியிட்டிருந்தால் அவற்றின் விவரங்கள், ஒரு பிரதி, தமிழ் அமைப்புகளில் பொறுப்பாளராகவோ, உறுப்பினராகவோ இருந்தால் அது குறித்த விவரங்களுடன் அனுப்ப வேண்டும்.
மேலும் விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தக்கப் பணிகள், தமிழறிஞா்கள் இருவரின் பரிந்துரைக் கடிதம், தமிழ்ப் பணிக்காக ஆற்றியுள்ள சான்றுகளை இணைத்து, கோவை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அலுவலகத்தில் கிடைக்கும்படியாக நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பிவைக்க வேண்டும். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 - 2300718 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...