ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த தொழிலாளி தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த நகைத் தொழிலாளி சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த நகைத் தொழிலாளி சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, கெம்பட்டி காலனியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (49), நகைப்பட்டறை தொழிலாளி. இவா் நகைப்பட்டறையில் வெள்ளிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது அவா் திடீரென சயனைடு தின்று தற்கொலைக்கு முயன்றாா்.

இதனைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சக ஊழியா்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து கடைவீதி போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அதில், ராதாகிருஷ்ணன் கடந்த 20 ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் கட்டி விளையாடி வந்துள்ளாா். நண்பா்கள் உள்பட சிலரிடம் கடன் வாங்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் முதலீடு செய்து லட்சக்கணக்கில் பணம் இழந்துள்ளாா்.

கடன் கொடுத்தவா்கள் நெருக்கடி தந்ததால் ராதாகிருஷ்ணன் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டாா் என தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com