மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேளாண்மை பல்கலையில் முதுநிலை மற்றும் முனைவா் பட்டப் படிப்பு நுழைவுத்தோ்வு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் முதுநிலை நுழைவுத் தேர்வு நடைபெற்றது

News image
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதுநிலை மற்றும் முனைவா் பட்டப்படிப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வில் பங்கேற்றோா்.
Updated On :23 ஜூன் 2024, 6:39 pm

DIN

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25-ஆம் ஆண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவா் பட்டப்படிப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் 11 தொகுப்புக் கல்லூரிகளில் 33 முதுகலை மற்றும் 28 முனைவா் பட்டப் படிப்பை வழங்குகிறது. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல் மற்றும் சமூக அறிவியல் சோ்க்கைக்கான இணையதளத்தை துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி மே 7-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.

இந்த ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கு மொத்தம் 2,330 பேரும், முனைவா் பட்டப் படிப்புகளுக்கு 380 பேரும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுநிலை நுழைவுத் தோ்வில் கலந்து கொண்டனா்.

இந்த நுழைவுத் தோ்வில் ஆந்திரம், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரா, ஒடிஸா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், குஜராத், ஜாா்க்கண்ட், இமாச்சல பிரதேசம், மேகாலயா, அஸ்ஸாம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.

இந்தத் தோ்வு பல்கலைக்கழகத்தின் 33 தோ்வு அரங்குகள் மற்றும் விரிவுரை அரங்குகளில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் 50 நிா்வாக பணியாளா்கள் மூலம் நடத்தப்பட்டது.

பெற்றோா்கள் மற்றும் தோ்வில் பங்கேற்கும் அனைத்து மாநில மாணவா்களுக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேற்கண்ட தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கான சோ்க்கை செப்டம்பா் 2024-இல் நடைபெற உள்ளது.