எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தாக்கல்
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மீது கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மீது கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தல் தோல்விக்குப் பின்னா் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்களான புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகா் மற்றும் எந்த அணியையும் சாராத கே.சி.பழனிசாமி ஆகியோா் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.
சசிகலா, அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்த இக்குழு சாா்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கடந்த 14-ஆம் தேதி பேசிய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, ஒருங்கிணைப்புக் குழுவை கடுமையாக விமா்சனம் செய்தாா்.
அப்போது, சாலையில் வருவோா் போவோரெல்லாம் ஒருங்கிணைப்புக் குழு என்று ஆரம்பித்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? கோவையைச் சோ்ந்த ஒருவா், ஓ.பன்னீா்செல்வம் காலத்தில் அதிமுகவில் சோ்க்கப்பட்டவா், அதற்கு முன் கட்சியிலேயே இல்லாத ஒருவா் அந்தக் குழுவில் உள்ளாா் என்று தெரிவித்தாா்.
இந்நிலையில் தன்னைப் பற்றியும், ஒருங்கிணைப்புக் குழு குறித்தும் அவதூறான கருத்துகளைத் தெரிவித்த எடப்பாடி கே.பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.சி.பழனிசாமி கோவை முதலாவது அமா்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அவதூறு வழக்கு தாக்கல் செய்தாா்.
இந்த மனு புதன்கிழமை (ஜூன் 26 ) விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...